உள்ளூர் செய்திகள்

கீரை சாகுபடியில் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் கரைசல்

கீரை சாகுபடியில், ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் கரைசல் தயாரிப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:கீரை சாகுபடியில், ஊட்டச்சத்து குறை பாடுகளால், அவற்றின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கும்.மைக்ரோ, மேக்ரோ ஆகிய இரு விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்படும் போது, கீரை இலைகளின் நிறம் மாற்றம் ஏற்படும்.சில நேரங்களில் கீரை தண்டிலும் நிற மாற்றம் எற்பட்டு இருக்கும். இதனால், கீரை சாகுபடியில் வருவாய் இழப்பு ஏற்படும்.இதை தவிர்க்க, மண் பரிசோதனை செய்வதன் மூலமாக ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறியலாம். குறிப்பாக, மைக்ரோ ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு, மைக்ரோ நியூட்ரியன் மிக்சர் அல்லது எம்.என்., மிக்சரில் ஏதேனும் ஒன்றை, 2 கிராம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.மேக்ரோ ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு, 19:19:19 நீர்ம உரத்தை, 3 கிராம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். நீர்ப்பாசனத்தின் வழியாகவும் பாய்ச்சலாம். இது போன்ற முறைகளை கையாளும் போது, கீரை சாகுபடியில் நல்ல மகசூல் மற்றும் வருவாய் ஈட்ட வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:முனைவர் செ.சுதாஷா,97910 15355.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !