உள்ளூர் செய்திகள்

நம்மூர் மண்ணிலும் தாய்லாந்து கிங் ஆப் சகாபாத் மாம்பழம்

தாய்லாந்து நாட்டின் கிங் ஆப் சகாபாத் ரக மாம்பழம் சாகுபடிகுறித்து, செங்கல்பட்டுமாவட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலாகூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான இடங்களில் விளையும், பலவித பழங்கள் மற்றும் காய் மரங்களைசாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், தாய்லாந்து நாட்டில் விளையும், கிங் ஆப் சகாபாத் ரக மா மரத்தை சாகுபடி செய்துள்ளேன். இந்த ரகம், மாடி தோட்டம் மற்றும் விளைநிலங்களில் எளிதாக சாகுபடி செய்யலாம். அந்த அளவிற்கு மிகவும் குட்டையாக இருக்கும். நம்ம ஊர் மணல் கலந்த களிமண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட பலவித மண்ணுக்கு ஊட்டத்துடன் வளர்கிறது.குறிப்பாக, மற்ற நாடுகள்மற்றும் மாநிலங்களின் மாம்பழங்கள், நம்மூர் களர்உவர் நிலத்தை தவிர, மேட்டு நிலம் மற்றும் வடிகால்வாய் வசதி இருக்கும் அனைத்து விதமான மண்ணிலும் நன்றாக வளரும். இருப்பினும், சுவையில் மட்டும் சற்று மாறுபடும்.மகசூலுக்கு எவ்வித குறைபாடு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.சசிகலா,98419 86400


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !