கூடுதல் வருவாய் தரும் காய்கறி விதை உற்பத்தி
விதை தரம் பிரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:பாரம்பரிய ரக காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன்.தக்காளி, கத்தரி, கீரை ஆகிய காய்கறிகளில் இருந்து, கண்ணுக்கு தெரியாத அளவிற்கு இருக்கும் விதைகளை பிரிப்பது கடினம்.இருப்பினும், முறையான தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி, முதிர்ந்த தரமான காய்கறிகளில் இருந்து, விதைகளை பிரித்து வருகிறேன். ஓராண்டு கழித்து பரிசோதனைக்கு பின் விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்தி வருகிறேன். தரமான விதைகள் உற்பத்தி செய்வதன் வாயிலாக, காய்கறிகளில் கிடைக் கும் வருவாயை விட, விதைகளின் வாயிலாகவே கூடுதல் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.குகன்,94444 74428.