மருத்துவ குணம் நிறைந்த வெள்ளை நிற பாகற்காய்
வெள்ளை நிற பாகற்காய் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், பந்தல் முறையில் வெள்ளை நிற பாகற்காய் சாகுபடி செய்துள்ளேன். நம்மூர் சவுடு மண்ணுக்கு, அதிகமாக படர்ந்து செல்கிறது. இது பிற ரக பாகற்காய் போல நீளமாகவும், குட்டையாகவும் இருக்காது. சீரான அளவில் வெள்ளை நிறத்தில் இருக்கும்.சுவை மற்றும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் தயக்கம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.மாதவி, 97910 82317.