உள்ளூர் செய்திகள்

வெண்ணிற மார்பக கினிக்கோழி பராமரிப்பில் வருவாய் ஈட்டலாம்

வெண்ணிற மார்பக கினிக்கோழி பராமரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:நந்தனம் - 1, வெண்ணிற மார்பக கினிக்கோழி உள்ளிட்ட பல்வேறு கினிக்கோழிகள் உள்ளன. வெண்ணிற மார்பக கினிக்கோழி, கருப்பு, வெள்ளை புள்ளிகளுடன் இருக்கும். இந்த கினிக்கோழியை தோட்டம் மற்றும் வீடுகளிலும் வளர்க்கலாம். எப்படி வளர்த்தாலும், காட்டுக்கோழி இறைச்சி போலவே, அதிக புரதச்சத்து நிறைந்து இருக்கும். குறிப்பாக, எல்லா தட்பவெப்ப சூழலிலும் வளரும் தன்மை உடையது. இலைகள், கீரைகள், புற்கள் ஆகியவற்றை தீவனமாக எடுத்துக் கொள்வதால் செலவு குறைவு.வீடுகளில் வளர்க்கும் போது, காய்கறிகழிவுகளை உணவாக எடுத்துக் கொள்ளும். தோட்டங்களில் வளர்க்கப்படும் போது, மண்ணில் இருக்கும் புழு, பூச்சி, புல்சாப்பிடுவதால் சிறந்த களைக்கொல்லி கோழியாக வளரும்.பாம்புகளை விரட்டும் தன்மையும் இந்த வெண்ணிற மார்பக கினிக்கோழிக்கு உண்டு. இதன் முட்டை நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதால், முட்டை மற்றும் இறைச்சி அதிக நறுமணத்துடன் இருக்கும். இதனால், இருவிதத்தில் வருவாய் ஈட்ட வெண்ணிற மார்பக கினிக்கோழி வளர்ப்பு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !