மாடி தோட்டத்திலும் பிளிம்பி நெல்லி வளர்க்கலாம்
பிளிம்பி நெல்லி சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்து, செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:பிளிம்பி என, அழைக்கப்படும் புளி மரங்களை வரப்பு பயிராகவும் மற்றும் மாடி தோட்டத்திலும் சாகுபடி செய்துள்ளேன். இது, நெல்லி வகையைச் சேர்ந்த மரம்.இதனால், இலை, அடிமரம், நுனி மரம் உள்ளிட்ட பல பகுதிகளில், கொத்துக் கொத்தாக பிளிம்பி நெல்லிக்காய்கள் காய்க்கும். இதை ஊறுகாய் போடுவதற்கு பயன்படுத்தலாம். இதுதவிர, புளியம்பழத்திற்கு மாற்றாக,இந்த புளியை பயன்படுத்தலாம்.இந்த பிளிம்பி காய்களில், சாதாரண நெல்லிக்காயைக் காட்டிலும், கூடுதல் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த பிளிம்பி காய்களை, ஊறுகாய் போட்டு மதிப்பு கூட்டிய பொருளாகதயாரித்து விற்பனைசெய்தால், கூடுதல்வருவாய் ஈட்டலாம். இவ்வாறு அவர்கூறினார். தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்94441 20032