உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எம்.எல்.ஏ., முனிரத்னா வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு 

எம்.எல்.ஏ., முனிரத்னா வழக்கு ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு 

பெங்களூரு: கான்ட்ராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.கான்ட்ராக்டர் செலுவராஜை, ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.முனிரத்னா சார்பில் ஆஜரான வக்கீல், தனது வாதத்தின் போது, 'எனது மனுதாரர் மீது போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. மனுதாரரிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி இல்லை. விசாரணை நடத்த தகுதி வாய்ந்த அதிகாரியிடம் அனுமதி பெறவில்லை' என்றார்.அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள், 'புகார்தாரர் மீதான குற்றச்சாட்டு கடுமையானவை. சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, போலீஸ் நிலைய அங்கீகாரம் வழங்க உள்துறை உத்தரவிட்டு உள்ளது. இதனால் அவர்களாலும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முடியும்' என்றனர்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அரசு தரப்பு வாதங்களை ஏற்று, முனிரத்னா மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !