உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாரடைப்பால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு?

 மாரடைப்பால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு?

சித்ரதுர்கா: நெஞ்சு எரிச்சலால், நான்கு வயது சிறுவன் உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் வசிப்பவர் அபிநந்தன். இவர் ஹிரியூரு மண்டல பா.ஜ., தலைவராக உள்ளார். இவரது மகன் வைஷ்ணவ், 4. சிறுவன் நேற்று காலை விளையாடும் போது, நெஞ்சு எரிகிறது என, அழுதார். அப்போது, வாயு பிடிப்பு பிரச்னையாக இருக்கலாம் என பெற்றோர் நினைத்து, வீட்டில் இருந்த மருந்தை கொடுத்தனர். ஆனால், எரிச்சல் அதிகரித்தது. பெற்றோர், மருத்துவமனைக்கு அந்த சிறுவனை அழைத்து சென்றனர். ஆனால் வழியில் சிறுவன் உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர். 4 வயது சிறுவன் இறந்தது, பெற்றோரையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை