சீரற்ற வாழ்க்கை முறையால் இந்தியாவில் 60 சதவீத இறப்பு
பெங்களூரு: ''இந்தியாவில் 60 சதவீதம் இறப்புகளுக்கு சீரற்ற வாழ்க்கை முறையால் ஏற்பட்ட நோய்களே காரணம்,'' என்று பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி.,யும், டாக்டருமான சி.என்.மஞ்சுநாத் கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது: இந்தியாவில் 60 சதவீதம் இறப்புகளுக்கு, சீரற்ற வாழ்க்கை முறையால் ஏற்பட்ட நோய்களே காரணம். உதராணமாக, நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றை சொல்லலாம். இது போன்ற நோய்களை நிவர்த்தி செய்ய முடியாமல், எந்த நாடும் முன்னேற முடியாது. நாட்டில் தொழில்நுட்பம், தொழில்துறை வளர்ச்சி மட்டுமின்றி சுகாதாரம், நீர், சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். சுத்தமான நீர், சுத்தமான காற்று, கலப்படமற்ற உணவு போன்ற வையே ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கிய காரணிகளாகும். நவீன மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஏற் பட்டுள்ள வளர்ச்சியால் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமே அளிக்க முடியும். ஆனால், வரக்கூடிய நோயை யாராலும் தடுக்கவே முடியா து. இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுதோறும் 14 லட்சம் பேரும், காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 22 லட்சம் பேரும் இறக்கின்றனர். இந்த இரண்டு விஷயமும், முழு சுகாதார அமைப்பின் ஒட்டு மொத்த தற்காப்பு முயற்சிகளை யும் முறியடித்து விடுகின்றன. இவ்வாறு அவர் கூறி னார்.