ஆங்கிலேயர் காலத்தில் புழக்கத்தில் இருந் த எடை பார்க்கும் இயந்திரம்
- நமது நிருபர் - மைசூருக்கு செல்லும் சுற்றுலா பயணியர், அபூர்வமான பொருளை கண்டு ரசிக்க மறக்காதீர்கள். பயணியரின் பொருட்கள், பார்சல், பாரமான சரக்குகளை எடை பார்க்கும் ஆங்கிலேயர் காலத்து அபூர்வமான அபூர்வ இயந்திரம், மைசூரு ரயில்வே மியூசியத்துக்கு வந்துள்ளது. மைசூரு நகரில் ரயில்வே மியூசியம், சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. அந்த காலத்து நிலக்கரியால் இயக்கப்பட்ட ரயில் முதல், இன்றைய மின்சார ரயில்கள் வரை பல்வேறு ரயில்களை இங்கு பார்க்கலாம். இவை சிறார்களுக்கு மிகவும் பிடித்துள்ளன. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில், மியூசியத்துக்கு பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். தற்போது, மற்றொரு அபூர்வமான இயந்திரம், ரயில்வே மியூசியத்துக்கு வந்துள்ளது. கடந்த, 1880ம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், எடை இயந்திரம் தயாரிக்கப்பட்டது. இது, 2,000 கிலோ எடை கொண்டதாகும். இதை ரயில் நிலையத்தில் பயணியரின் லக்கேஜ், பார்சல்கள், சரக்குகளை எடை பார்க்க பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின், 'ஹென்ரிபோலி அண்ட் சன்' என்ற நிறுவனம், இந்த இயந்திரத்தை தயாரித்துள்ளது. இந்திய ரயில்வே ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ரயில் நிலையங்களில், பயணியர் லக்கேஜ்களை எடை போட்டு, அவற்றின் எடைக்கு தக்கபடி, கட்டணம் நிர்யணிப்பதற்காக இந்த எடை இயந்திரம் பயன்படுத்தப்பட்டது . க டந்த, 1951ம் ஆண்டில், மைசூரு மாநில ரயில்வே, தென்னக ரயில்வே, மதராஸ் மற்றும் சதர்ன் மராட்டா ரயில்வேக்கள் இணைக்கப்பட்ட பின், அந்த எடை இயந்திரம் தென்னக ரயில்வேயிடம் இருந்தது. அதன் பின் கோலாரின் பங்கார்பேட் ஜங்ஷனில் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. பயணியரின் பொருட்கள், பார்சல்கள், பாரமான சரக்குகளை எடை பார்க்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம், தொழில்நுட்பத்திறன் அற்புதமானது. கெட்டியான இரும்பால் தயாரிக்கப்பட்டது. 2,000 கிலோ வரை அளவிடும் திறன் கொண்டது. அதிநவீன இயந்திரங்க ள் வந்துள்ளதால், பழமையான இந்த எடை இயந்திரத்தை விற்க, தென்னக ரயில்வே முடிவு செய்திருந்தது. இதையறிந்த மைசூரு ரயில்வே துறை, எடை இயந்திரத்தை சரி செய்து, ரயில்வே மியூசியத்தில் வைத்துள்ளது. இதன் பழமை மாறாமல் பழுது பார்த்துள்ளனர். இதை சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
எப்படி செல்வது?
பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து ஆவதி கிராமம் 55 கி.மீ., துாரம். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, தேவனஹள்ளிக்கு பி.எம்.டி.சி., பஸ் உள்ளது. இங்கிருந்து, ஆட்டோவில் செல்லலாம். சிக்கபல்லாபூர் செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் சென்றால், ஆவதி கேட் பகுதியில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். பைக், காரில் சென்றால் தேவனஹள்ளியை கடந்து செல்லும் போது, ஆவதி என்று பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி பயணித்தால் ஆவதி செல்ல முடியும்.
எப்படி
செல்வது?
பெங்களூரு, மங்களூரு உட்பட, அனைத்து நகரங்களில் இருந்தும், மைசூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், மைசூரின் மண்டக்கள்ளி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனத்தில். ரயில்வே மியூசியம் செல்லலாம். பார்வை நேரம்: காலை 10:00 மணி முதல், 5:30 மணி வரை. பெரியவர்களுக்கு 50 ரூபாய், சிறார்களுக்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர்பு எண்: 0821 - 286 6955 அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: மைசூரு அரண்மனை, ஜெகன் மோகன் அரண்மனை,செயின்ட் பிலோமினா தேவாலயம், சாமராஜேந்திரா மிருகக்காட்சி சாலை, காரஞ்சி ஏரி, ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம்.