உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கேரளாவில் அஹிந்தா மாநாடு சித்தராமையாவுக்கு அழைப்பு

 கேரளாவில் அஹிந்தா மாநாடு சித்தராமையாவுக்கு அழைப்பு

பெங்களூரு: கேரளாவில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், நாளை மறுதினம் ஏற்பாடு செய்துள்ள அஹிந்தா மாநாட்டில் பங்கேற்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்ததில், அஹிந்தா சமுதாயம் முக்கிய பங்கு வகித்தது. தற்போது முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில், தன் ஆதரவாளர்கள் மூலமாக, அஹிந்தா மாநாடு நடத்த முதல்வர் சித்தராமையா தயாராகி வருகிறார். இதற்கிடையில், 2026 மே மாதம், கேரள சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளார். தனக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், அஹிந்தா மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளார். கேரளாவின் வர்கலாவில், நாளை மறுதினம் நடக்கவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, வேணுகோபால் அழைப்பு விடுத்துள்ளார்.கேரளாவில் நடக்கும் மாநாட்டுக்கு செல்லும் போது, கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள முதல்வர் பதவி குழப்பம் உட்பட, பல விஷயங்கள் குறித்து, வேணுகோபாலுடன் சித்தராமையா ஆலோசனை நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலிட அளவில் வேணுகோபாலுக்கு, நல்ல செல்வாக்கு உள்ளது. இவரது கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே இவரது ஒத்துழைப்புடன், முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ள சித்தராமையா, முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ