மாநில கல்வி கொள்கை அறிக்கை ஆய்வுக்கு அமைச்சரவை துணை குழு
பெங்களூரு: கர்நாடகாவில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தாமல், மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, மாநில கல்வி கொள்கை ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்ய, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. கல்வி முறையை நவீன தேவைக்கு ஏற்ப மேம்படுத்தும் வகையிலும், உலகளாவிய தரத்திற்கு உயர்த்தவும் மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் விஷயத்தில் அடம் பிடிக்கிறது. மாநில கல்வி கொள்கையை அமல்படுத்தவே நினைக்கின்றனர். மாநில கல்வி கொள்கை வகுக்க சுக்தேவ் தோரத் என்பவர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி அரசிடம் 2,197 பக்க அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து, கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அறிக்கையில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து, அரசுக்கு உரிய பரிந்துரை வழங்க அமைச்சரவை துணை குழு அமைக்கவும் முடிவு செ ய்யப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் அமைச்சரவை துணை குழு நேற்று முன்தினம் அமை க்கப்பட்டது. இந்த குழுவில் அமைச்சர்கள் சட்ட துறை எச்.கே.பாட்டீல், சமூக நல துறை - மஹாதேவப்பா, வருவாய் துறை - கிருஷ்ண பைரே கவுடா, மருத்துவ கல்வி - சரண பிரகாஷ் பாட்டீல், உயர் கல்வி - எம்.சி.சுதாகர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.