உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கஞ்சா பயிரிட்ட ஏட்டு மகன் கைது

 கஞ்சா பயிரிட்ட ஏட்டு மகன் கைது

துமகூரு: தோட்டத்துக்கு நடுவே, திருட்டுத்தனமாக கஞ்சா பயிரிட்ட ஏட்டு மகன், போலீசாரிடம் சிக்கினார். துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவின் குட்டதஹள்ளி ஹட்டி கிராமத்தில் தோட்டத்துக்கு நடுவில் கஞ்சா பயிரிடுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சேளூர் போலீசார், நேற்று காலையில் கிராமத்துக்கு சென்று சோதனை நடத்தினர். குறிப்பிட்ட ஒரு தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதை கண்டுபிடித்தனர். தோட்டத்தில் உரம் போட்டு, 8.2 அடி உயரத்தில் வளர்த்திருந்த கஞ்சா செடிகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செடிகள், 950 கிராம் எடை இருந்தது. கஞ்சா பயிரிட்ட ஹிதேந்திரா, 28, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் துமகூரு நகரின் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவரின் மகன் ஆவார். விசாரணையின் போது, வீட்டில் கடவுள் பூஜைக்காக கஞ்சா செடியை வளர்த்ததாக, அவர் கூறியுள்ளார். போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டிய போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவரே, கஞ்சா வளர்த்திருப்பது போலீஸ் துறைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிதேந்திரா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை