உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஊடுருவிய வெளிநாட்டினர் தங்க அனுமதி; சொகுசு விடுதி உரிமையாளர் மீது வழக்கு

 ஊடுருவிய வெளிநாட்டினர் தங்க அனுமதி; சொகுசு விடுதி உரிமையாளர் மீது வழக்கு

உடுப்பி: எந்த ஆவணங்களும் இல்லாத வெளிநாட்டு நபர்களை, தங்க வைத்த சொகுசு விடுதி உரிமையாளர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது. உடுப்பி மாவட்டம், பிரம்மாவரா தாலுகாவின் பாரகூர் கிராமத்தின் அரசு மருத்துவமனைக்கு வெளிநாட்டு கர்ப்பிணி, சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது அங்குள்ள டாக்டர்கள், அவரிடம் ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. சட்டவிரோதமாக வசிப்பது டாக்டர்களுக்கு தெரிந்தது. உடனடியாக பிரம்மாவரா போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர். இதையடுத்து போலீசார், கர்ப்பிணி வசிக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு ரீபக் தமாயி, 28, சுனிதா தமாயி, 27, ஊர்மிளா, 19, கைலாஷ் தமாயி, 18, கபில் தமாயி, 19, உட்பட, மூன்று சிறார்களும் தங்கியிருப்பது தெரிந்தது. ஹனேஹள்ளி கிராமத்தின் சங்கம்மா என்பவருக்கு சொந்தமான சொகுசு விடுதியில் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். இவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. எனவே சொகுசு விடுதி உரிமையாளர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது. இது குறித்து, உடுப்பி எஸ்.பி., ஹரிராம் சங்கர் கூறியதாவது: சொகுசு விடுதியில் தங்கியிருந்தவர்கள் இந்திய குடிமக்கள் இல்லை. எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆவணங்களும், இவர்களிடம் இல்லை. தற்போதைக்கு இவர்கள் எந்த நாட்டின் குடிமக்கள் என்பது தெரியவில்லை. குடிமக்களுக்கான அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், விசா என, எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனர். இவர்கள் மீது பிரம்மாவரா போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது. விசாரணை நடக்கிறது. வேறு நாடுகளின் நபர்கள், ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக வசிப்பது, நம் நாட்டின் பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படும். இத்தகைய நபர்கள் வசிப்பது தெரிந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம். ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு நபர்களை, சொகுசு விடுதி, லாட்ஜ்களில் பணிக்கு நியமிப்பது குற்றமாகும். இது போன்றவற்றின் உரிமையாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நாட்டின் நபர்கள், இங்கு தங்க வந்தாலும் அவர்களை பற்றிய தகவல்களை, மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு தெரிவிப்பது கட்டாயம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி