உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சஸ்பெண்ட் ஊழியர்களுக்கு உதவி 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு 

சஸ்பெண்ட் ஊழியர்களுக்கு உதவி 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு 

வில்சன் கார்டன்: போலி ஆவணம் தயாரித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி., ஊழியர்களை மீண்டும் பணியில் சேர உதவிய மூன்று அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி லட்சுமணன் நேற்று முன்தினம், வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார்: கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர், அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் என யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம். தவறு செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சில ஊழியர்கள், சஸ்பெண்ட் காலம் முடிவதற்கு முன்பே, பணியில் சேர்ந்தது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்த போது கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் கணக்கு பிரிவு துறையி ல் இளநிலை உதவியாளராக வேலை செய்யும் ரிச்சர்ட், ஷிவமொக்கா போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் நாகராஜப்பா, குந்தாபுரா பணிமனையின் சந்திரஹாஸ் ஆச்சாரி ஆகிய 3 பேரும் போலி ஆவணம் தயாரித்து கொடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை மீண் டும் பணியில் அமர்த்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது. பு காரின்படி போலீசார் விசாரித்த போது, போலி ஆவணங்களை தயாரித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்ததும், இதற்காக பணம் வாங்கியதும் தெரிய வந்தது. எனவே மூன்று அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ