உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அனைத்து துறையிலும் மத்திய அரசு தோல்வி: கார்கே

 அனைத்து துறையிலும் மத்திய அரசு தோல்வி: கார்கே

கலபுரகி: ''அனைத்து துறையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளது,'' என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார். கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி: நாட்டில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது. நல்லாட்சி செய்ய தான் பா.ஜ.,வை மக்கள் ஆதரித்தனர். ஆனால் நாட்டு மக்களை பற்றி, மத்திய அரசுக்கு கவலை இல்லை. அனைத்து துறையிலும் தோல்வி அடைந்து உள்ளது. மக்கள் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, வெறும் வார்த்தைகளால் சமாதானப்படுத்துகின்றனர். பா.ஜ., மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. வேலையின்மையும் நாளுக்கு, நாள் உயருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் மத்திய அரசு பலவீனப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Keshavan.J
ஜூன் 02, 2026 07:45

2014-க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்று இருந்தது . தெருக்களிலும் சாலைகளிலும் தேனும் பாலும் ஆறாய் ஓடின. இந்தியா உலகின் முதல் பொருளாதாரமாக இருந்தது, இப்போது அது 5-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. திரு. கார்கே, இது போதுமா இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை