உள்ளூர் செய்திகள்

செக் போஸ்ட்

பல்லாரி போல மாலுார்

தே சிய அளவில் இரும்பு கனிம கொள்ளையில் பல்லாரி தான் முதலிடம். அதன் டாப் மோஸ்ட் லீடரான மந்திரிக்கு 'பேக் டோரில்' கிடைத்த வருவாயில் ஏழுமலையானுக்கு வைர கிரீடம், தாம் சொகுசாக சுற்றி வர சொந்த ஹெலிகாப்டர், தங்கத்தில் ஸ்பூன் என எல்லா வசதிகளுடன் சொகுசா வாழ்ந்தவரை பூ ஆட்சி இருக்கும் போதே சட்டம் சிறைக்குள் தள்ளியது. அவரை கேப்பை களி தின்ன வெச்சது. இதே போல, மாலுாரில் கல்குவாரி குத்தகை முறைகேடு நடந்திருக்குது. ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு சட்ட விதிகளை மீறி குத்தகை 5 கி.மீ., துாரத்துக்கு பெறப்பட்டதாகவும், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியவர், ப.பேட்டை 'கை' -யின் அசெம்பிளிகாரர் குத்தகை பேரில் கல்குவாரி மோசடி செய்தவர் அதே கட்சியின் மாலுார் காரர் என்பதை வெளிபடுத்தியும் இருக்கிறாரு. ஆனால் இதன் பேரில் அரசு தரப்பில் நோ ஆக் ஷன். முக்கிய புள்ளி வரை சேர வேண்டியது போய் சேர்த்திருப்பதால் மாலுார்காரரை ஆட்டவோ அசைக்கவோ முடியலையாம். அதனால் ப.பேட்டையாருக்கு புலம்புவதை தவிர எந்த பயனும் இல்லையாம்.

வருமா தேர்தல்?

வே கமாக நடத்தப்பட்ட வேம்கல் பஞ்., தேர்தல் கை கட்சிக்கு அபஸ்வரமாகி விட்டது. உத்தரவாத அரசுக்கு அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளது. இதனையே சாக்காக வைத்து அக்டோபரில் நடத்தப் பட வேண்டிய முனிசி., தேர்தலை இப்போதைக்கு வேண்டாம் என்று முனிசி., டவுன் சபை உள்ள தொகுதிக்காரர்கள் சி.எம்.,மை சந்தித்து கெஞ்சியிருக்காங்க. முதல் சறுக்கலை புரிந்து கொண்டு, தேர்தல் நடத்த வேண்டிய அவசியமே இல்லை என ஆலோசனை சொல்லி இருப்பதால் முனிசி., தேர்தல் வருமா, வராதா என்ற சந்தேகம் இருப்பதாக சொல்றாங்க. தலைநகர் கார்ப்ப ேஷன் தேர்தலையே நடத்தாமல் ஐந்து வருஷம் காலம் தள்ளினதை போல முனிசி., தேர்தலையும் மறந்து விட செய்வாங்களோ. 35 வார்டுகளில் பதவியில் இருக்கிறவங்க செய்தது, செய்ய தவறியது, கவுன்சிலில் பேசியது, அதனால் கிடைத்த பலன், கவுன்சிலில் பேசாமலேயே காலம் தள்ளியது, இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு மதிப்பெண் போட்டால் எத்தனை பேர் 'பாஸ்' ஆவாங்களோ.

யாருக்கு சொந்தம்?

பே த்தமங்களா ஏரியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆலை பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. இது கோல்டு மைன்சுக்கு சொந்தமானது என்பது ஊரறிந்த தகவல். ஆனால், அதை எப்போ யாருக்கு விற்றாங்க. அங்கு வேலை செய்றவங்களுக்காக குடியிருக்கும் வீடுகளும் சுரங்க நிர்வாகத்துக்கு சொந்தமானதென சொல்லப்பட்டது. ஆனால் அந்த வீடுகளுக்கு பட்டா பதிவு ஆகியிருக்குதாமே. வீட்டுரிமை பட்டா யார் யாருக்கு எப்போது வழங்கினாங்க. பே.மங்களா ஏரியை சுற்றி இருந்த கோல்டு மைன்சுக்கு சொந்தமான நிலமும் யாருக்கு யார் தாரை வார்த்து கொடுத்தது. இதன் பேரில் சர்வே எடுப்பாங்களா; கையகப் படுத்துவாங்களான்னு கோல்டு மைன்ஸ் முன்னாள் தொழிலாளர்களுங்க கிளறுறாங்க.

பாகப்பிரிவினை

கோ ல்டு சிட்டி உட்பட கோலார் மாவட்டத்தின் 6 தொகுதிகளிலுமே பூவும், புல்லுக்கட்டும் இணைந்து எல்லா தேர்தல்களையும் சந்திக்க போறாங்களாம். கை காரர்களின் சூட் கேசுக்கு பூ விலை போனதாக கோல்டு சிட்டி அசெம்பிளி தொகுதிக்கு நடந்த ரெண்டு தேர்தல்களில் கோட்டை விட்டதாக பேசப் பட்டது. அந்த பழைய தில்லாலங்கடி வேலைகளை இம்முறை நடக்க விடாமல் தடுக்க போறாங்களாம். பூ கட்சிக்கு மூன்று; புல்லுக்கட்டுக்கு மூன்று தொகுதிகள் என பேசி கை காரர்களின் அத்தியாயத்தை முடிக்க வேணுமாம். ப.பேட்டை, கோலாரு, கோல்டு சிட்டி ஆகியவை 'பூ' வுக்கும்; மாலுார், முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய மூன்றும் புல்லுக்கட்டுக்கும் பாகப்பிரிவினை செய்துக்க போறாங்களாம். இது போல் முனிசி, டவுன் சபை தேர்தல்களிலும் கூட்டணி நீடிக்கும் என்கிறாங்க. கோலாரு மாவட்டத்தை மீட்க இரு கட்சிகளுமே கட்டித் தழுவுறாங்க. எல்லாமே வேம்கல் வெற்றியின் வேகம் தானாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி