செக் போஸ்ட்
சீரழிந்த சாலை உயிர் பெறுமா?
ப ல வருஷமா சுரங்க குடியிருப்பு பகுதிகளின் தெருக்கள், சாலைகள் சீரழிந்து கிடக்குது. இதை சிலர் சமூக வலைதளத்தில் படம் பிடித்து காட்டியும் வராங்க. இதை சுட்டிக்காட்டி முனிசி., தேர்தலில் போட்டியிட விரும்புகிறவங்க இதுக்கு முன்னாடி இருந்தவங்க திறமைய பாத்தீங்களான்னு சொல்ற அலப்பறை கொஞ்சம் ஓவராக இருந்து வருது. கோரமண்டல் ரயில் நிலையம் அருகே 30 வருஷமாக சீரழிந்த சாலைக்கு விடை தெரியல. ஹென்றீஸ் சாலை கதியும் இதே தான். ஆனால், சாலை சீரமைக்காததற்கு எதிர்ப்பார்த்த 15-வது திட்ட நிதி '10 சி' கிடைக்கலயாம். கிடைச்சிருந்தா சீராகி இருக்குமென 'மாஜி' தலைவரு நியாயம் பேசுறாரு. இப்பவும் இந்த சாலைகளை அசெம்பிளி மேடம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க போவதாக சொல்லி இருக்காங்களாம். மைனிங் பகுதி சாலைகளை சீரமைக்க தான், எந்த நிதியும் வந்து சேரமாட்டேங்குதோ. மற்ற எல்லா பகுதிகளையும் சீரமைக்க, நிதி மழை எப்படி தான் தாராளமாக கொட்டுதோ. இவர், கை கட்சியில் இருந்து வெளியேறின பிறகும் கூட மேடம் மீது இவருக்கு என்ன அப்படி பரிவோ. இவர் இருக்கும் பூ கட்சி மீது விசுவாசம் எப்போ வருமோ?
பிச்சைக்காரர்கள் நல நிதி எங்கே?
' பெ மல் பேக்டரி'யில் இருந்து சொத்து வரி '4 சி' கோல்டன் நகராட்சிக்கு வந்திடுச்சாம். அதை எதுக்கு பயன்படுத்தினாங்களோ. முழு தொகையும் மின் விளக்குகள் எரிய வைக்க செலவாயிடுச்சி... நாங்க சொல்வதெல்லாம் உண்மையென கணக்கு சொல்றாங்களாம். முனிசி.,யில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்கு பல லட்சம் ஒதுக்குறாங்க. ஆனால், இவர்களுக்காக இருக்கும் ஒரே தங்கும் விடுதி மூடியே கிடக்குது. அந்த தொகை யார் வீட்டுக்கு போகிறதோ. விளையாட்டுத் துறைக்கு நிதி ஏதாச்சும் செலவழிச்சதா கணக்கு இருக்கா. இதுக்காக முனிசி., யின் கைங்கரியம் என்னவோ. பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்புக்கு உதவித் தொகை வழங்குவதில் பெரும் குளறுபடி இருக்குதாமே. ஆபீசர்கள் ஆதிக்கம் நகர மக்களின் கண்களை கட்டிப் போட்டுள்ளதாம். இது எப்போ சரியாகுமோ.
மரக்கன்று நடுவதில் கொள்ளை?
த ங்கமான நகரில் உலக சுற்றுச் சூழல் தினம் கடைப்பிடிக்கிறாங்க. 15 வருஷத்துக்கு மேலாக வருஷா வருஷம் மரக் கன்றுகளை முனிசி., யினர், நட்டபடி இருக்காங்க. மரக் கன்றுகள் நடுவதோடு இவர்களோட வேலை முடிந்து போனதாக நினைக்கிறாங்க. செடி வளர்ப்புக்கு உரமிட்டார்களா, நீர்பாய்ச்சினார்களா, அந்த மரக் கன்றுகளுக்கு உரிய வேலி ஏற்படுத்தினாங்களா. தானா வளரும் என இயற்கை மீது பழியை சுமத்தி, மரக் கன்றுகள் பேரில் பல்லாயிரம் ரூபாய் சுருட்டும் வேலையை தான் கச்சிதமாக செய்து வராங்க. வழிநெடுகிலும் மரக் கன்றுகள் நட்டு வைக்க கண்துடைப்பு வேலையை செய்றவங்களுக்கு ஆண்டு தோறும் கான்ட்ராக்ட். இதில் ஸ்பெஷல் கமிஷன் கொள்ளை நடக்குதாமே.
ஐ.சி.யூ., பயன்பாட்டுக்கு வருமா?
க வர்மென்ட் ஆஸ்பிடலில் 'ஆம்புலன்ஸ்' சேவைக்கும் தட்டுப்பாடு. கோல்டு சிட்டிக்கு உள்ள ஆம்புலன்ஸை, அதன் ஊழியர்களை, இடமாற்றம் செய்துட்டாங்களாம். ஏற்கனவே, மாரடைப்பு ஏற்பட்டால் மரணமே என்ற நிலையே தொடருது. பல்வேறு பிரிவுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத குறைபாடு ஒருபக்கம் இருக்க, மருத்துவ உபகரணங்கள் இருந்தும் பயனில்லை. ஐ.சி.யூ., வார்டு தயார் செய்தாங்களே, அதை எப்போ பயன்பாட்டுக்கு கொண்டு வருவாங்களோ?