உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிருஷ்ணா இல்லத்தில் சந்திப்பு முதல்வர் சிவகுமார் முடிவு

 கிருஷ்ணா இல்லத்தில் சந்திப்பு முதல்வர் சிவகுமார் முடிவு

பெங்களூரு: 'இனிமேல் என்னை சந்திக்க கிருஷ்ணா இல்லத்திற்கு வாருங்கள்' என்று பொதுமக்கள், கட்சியினருக்கு முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூரு சதாசிவ நகரில் முதல்வர் சிவகுமார் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது மனைவி, மகள்கள், மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வசிக்கின்றனர். அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சதாசிவநகர் வீட்டில் தான் சிவகுமார் சந்தித்து வருகிறார். அவர் முதல்வரான பின், அவரை சந்திக்க எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், மடாதிபதிகள் என தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருவதால், சிவகுமார் வீட்டை சுற்றியுள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், 'இனி என்னை சந்திக்க யாரும் சதாசிவநகர் வீட்டிற்கு வர வேண்டாம்; முதல்வரின் அரசு இல்லமான கிருஷ்ணாவுக்கு வாருங்கள்' என்று சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை