தொகுதி மறுவரையறை காங்., – எம்.எல்.ஏ., ஆதரவு
கோலார்: தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு, கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் ஆதரவு தெரிவித்துள்ளார். கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஒரு சட்டசபை தொகுதியில் ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இருந்தால், அவர்கள் குறைகளை கேட்கவும், தொகுதி பிரச்னையை கையாளவும் எம்.எல்.ஏ.,வுக்கு எளிதாக இருக்கும். மக்கள் தொகை அதிகமாக இருந்த போதிலும், தொகுதிகள் அதற்கு ஏற்ப மறுவரையறை செய்யப்படவில்லை. மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, எனது ஆதரவு உள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை நல்லது. தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சித்தாந்தம், பாரம்பரியத்தை யாரும் அழிக்க கூடாது. தமிழக அரசு செய்யாததை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.