கொரோனா நஷ்டம் திருடனாக மாறியவர் கைது
பையப்பனஹள்ளி: கொரோனா கால கட்டத்தில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு என்.ஜி.எப்., லே - அவுட் சதானந்தகவுடா நகரில் உள்ள ஒரு வீட்டில் 2025ன் அக்டோபர் 18ல், 783 கிராம் தங்கநகைகள் திருட்டு போனது. பையப்பனஹள்ளி போலீசார் விசாரித்து, ராஜா, 38, என்பவரை கைது செய்தனர். தாவணகெரேவை சேர்ந்த இவர், டிராவல் ஏஜென்சி நடத்தினார். கொரோனா பரவிய போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், டிராவல் ஏஜென்சியை மூடினார். பெங்களூரு வந்து, அப்பிகெரேவில் வசிக்கிறார். ஆட்டோ ஓட்டினார். அதிகமான பணம் சம்பாதிக்கும் நோக்கில், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர் மீது பையப்பனஹள்ளி, ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவாகியுள்ளது. 1.84 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.25 கிலோ தங்கநகைகள், ஒரு மொபைல் போன். பைக் பறிமுதல் செய்யப்பட்டது.