உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நீதிமன்றம் அதிரடி உத்தரவு கல்யாண மண்டபத்திற்கு சீல்

 நீதிமன்றம் அதிரடி உத்தரவு கல்யாண மண்டபத்திற்கு சீல்

தங்கவயல்: நீதிமன்ற உத்தரவால், ராபர்ட்சன்பேட்டை விவேக் நகரில் உள்ள ரெட்டி கல்யாண மண்டபத்துக்கு, தங்கவயல் தாசில்தார் பாரத், 'சீல்' வைத்தார். ராபர்ட்சன்பேட்டை விவேக் நகரில், கோவில் நிலத்தில் ரெட்டி கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளதாக பாபு என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை, கர்நாடக மாநில நிலம் ஆக்கிரமிப்பு தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி நாகலிங்கே கவுடா முன்னிலையில் நடந்து வந்தது. ரெட்டி கல்யாண மண்டப தலைவர் சேகர் ரெட்டி, செயலர் கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த நிலத்தை ஜே.கே.ராமசந்திர ஷெட்டி என்பவர் தானமாக வழங்கியதாகவும், நகராட்சியில் பட்டா பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், ராமச்சந்திர ஷெட்டிக்கு அந்த நிலம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டது. ரெட்டி கல்யாண மண்டபத்துக்கு சீல் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கல்யாண மண்டபத்திற்கு தங்கவயல் தாசில்தார் பாரத் சீல் வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை