உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுவன் உயிரை குடித்த லாரி தாக்கப்பட்ட டிரைவர் பலி

சிறுவன் உயிரை குடித்த லாரி தாக்கப்பட்ட டிரைவர் பலி

பெங்களூரு: பெங்களூரு தனிசந்திராவில் மார்ச் 29ம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகில், முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது, மாநகராட்சியின் குப்பை அள்ளும் லாரி மோதியது. இதில், கீழே விழுந்த அய்மன், 10 என்ற சிறுவன் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது தந்தை அப்துல் காதர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதனால் கோபம் அடைந்த சிறுவனின் உறவினர்கள், லாரி ஓட்டுநர் கொண்டய்யாவை சரமாரியாக தாக்கினர்; லாரிக்கும் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். லாரி ஓட்டுநர் கொண்டய்யாவை தாக்கிய நான்கு பேர் மீது, சம்பிகேஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொண்டய்யா, கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ