உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரு தசராவில் ட்ரோன்கள் சாதனை படைக்க ஏற்பாடு

மைசூரு தசராவில் ட்ரோன்கள் சாதனை படைக்க ஏற்பாடு

பெங்களூரு: இந்த ஆண்டு மைசூரு தசராவில், 3,500 ட்ரோன்களை பயன்படுத்தி, நாட்டின் தேசிய பறவையை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மைசூரு தசரா வரும் 11ம் தேதி துவங்குகிறது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் சார்பில் இந்தாண்டு ட்ரோன் நிகழ்ச்சி ஏற்பா டு செய்யப்பட்டு உள்ளது. அக்., 17, 18, 20, 21 தேதிகளில், இரவு 8:00 மணிக்கு பன்னி மண்டப மைதானத்தில் நடக்கிறது. சாதாரணமாக இல்லாமல், நுாற்றுக்கணக்கான மீட்டர் உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள், வானில் பிம்பங்களை உருவாக்கும் வகையில் நிலை நிறுத்தப்படும். இம்முறை, நாட்டின் தேசிய பறவையான மயிலின் கம்பீரமான பிம்பத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்ட 3,500 ட்ரோன்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், சாதனை படைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 15 நிமிடம் நடக்கும் இந்த நிகழ்ச்சி தசராவின் தனித்துவத்தை வெளிப்படுத்தும். கடந்த 2023ல் 250 ட்ரோன்கள்; 2024ல் 1,500 ட்ரோன்கள்; 2025ல் 2,983 ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. கடந்த, 2025ல் புலி வடிவம் அமைத்ததன் மூலம் சாதனை படைக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !