உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மின் இணைப்பு கம்பிகள் திருட்டு ஒளி இழந்தது ஐ லவ் கே.ஜி.எப்.,

மின் இணைப்பு கம்பிகள் திருட்டு ஒளி இழந்தது ஐ லவ் கே.ஜி.எப்.,

தங்கவயல்: உரிகம் ஐந்து விளக்கு சது க்கத்தில் 'ஐ லவ் கே.ஜி.எப்.,' அலங்கார பலகையின் மின் இணைப்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளன. உரிகம் ஐந்து விளக்கு பகுதியின் சதுக்கத்தை அழகுபடுத்த 4.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இங்கு ஆங்கிலம், கன்னடம் எழுத்துகளால் 'ஐ லவ் கே.ஜி.எப்.,' என்ற எழுத்து, மின்விளக்குகளால் ஒளிர்ந்தது. இந்த மின் விளக்கு நான்கு நாட்களாக எரியவில்லை. மின் இணைப்பை துண்டித்து மர்ம நபர்கள், மின் கம்பியை வெட்டி திருடிச் சென்றுள்ளனர். ஏற்கனவே, இருமுறை மின் இணைப்பு கம்பிகள் திருடப்பட்டன. நகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக மின் கம்பிகள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிலைக் குழு தலைவர் வி.முனிசாமி கூறுகையில், ''மின் கம்பிகள் திருட்டு குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். மின் கம்பிகள் திருட்டு குறித்து நேற்று இரவு வரை உரிகம் போலீஸ் நிலையத்தில் யாரும் புகார் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை