ட்ரோன் கேமராவில் சிக்கிய யானைகள்
'ட்ரோன்' கேமராவில் சிக்கிய யானைகள் பெங்களூரு ரூரல் ஆனேக்கல் தாலுகாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான முத்தியாலயமடுவு வனப்பகுதியில், நான்கு காட்டு யானைகள் ஒன்றாக சுற்றி திரிவது, 'ட்ரோன்' கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, 'இப்பகுதிக்கு சுற்றுலா செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.