பிரசவம் பார்க்க ரூ.3,000 லஞ்சம் பெண் டாக்டருக்கு 5 ஆண்டு சிறை
துமகூரு: பிரசவம் பார்க்க 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெ ண் டாக்டருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, துமகூரு மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. துமகூரின் கொத்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் முகுந்தா. 2021 பிப்ரவரி 2ம் தேதி, கர்ப்பமாக இருந்த இவரது மைத்துனி சவிதாவுக்கு வலி ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கிருந்த டாக்டர் மஹாலட்சுமம் மா, பிரசவம் பார்க்க 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். மைத்துனி, குழந்தையின் உயிரை காப்பாற்ற, முகுந்தாவும் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டார். அன்றிரவு 9:30 மணிக்கு, மருத்துவமனையின் 'டி குரூப்' ஊழியர் பரகத் அலியிடம், முன்பணமாக 2,000 ரூபாய் கொடுத்தார். அலியிடம் இருந்து டாக்டர் லட்சும ம்மா 2,000 ரூபாயை பெற்றுக் கொண்டார். பிப்., 4ம் லோக் ஆயுக்தா போலீசில் முகுந்தா புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்து, ஏழாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். டாக்டர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, செப்., 19ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், டாக்டர் லட்சுமம்மாவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.