மேலும் செய்திகள்
தாயிடம் சேர்க்கப்பட்ட 4 புலி குட்டிகள்
03-Dec-2025
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகரில் வனத்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் மயக்க மருந்து செலுத்தி ஆண் புலி பிடிக்கப்பட்டது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் தாலுகாவில், நஞ்சன்தேவபுரா கிராமத்தில் நேற்று முன்தினம் ஐந்து புலிகள் சுற்றித்திரிந்தன. இதே தாலுகாவில் உள்ள பீமனபீடு கிராமத்தில் சில நாட்களுக்கு முன் இரண்டு பசுக்களை, புலி தாக்கியது. நஞ்சன்தேவபுரா, பீமனபீடு கிராமத்தை சுற்றியே புலியின் நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதை சரி செய்யும் வகையில், 'ஆப்பரேஷன் பீஸ்ட்' எனும் பெயரில் புலிகளை பிடிக்கும் வழிமுறைகளை தொடங்கினர். 'ட்ரோன்' மூலம் புலிகளை தேடும் பணியில் நேற்று காலையில் ஈடுபட்டனர். இதில், பீமனபீடுக்கு அருகில் உள்ள பகுதியில் புலி நடந்து செல்வது கண்டறியப்பட்டது. அந்த பகுதிக்கு அதிகாரிகள் சென்றனர். ஆனால், புலி அங்கிருந்து தப்பிவிட்டது. இந்த புலி, முக்தி காலனி பகுதியில் லோகேஷ் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் சுற்றித்திரிந்தது. பண்டிப்பூர் கால்நடை மருத்துவர் மிர்சா வாசிம் தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர். துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தினர். புலி மயங்கி விழுந்தது. வனத்துறையினர் புலியை ஜீப்பில் எடுத்து சென்றனர். இந்த ஆண் புலிக்கு 7 முதல் 8 வயது இருக்கலாம் என கூறினர்.
03-Dec-2025