உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாணவர்களை ஜீப்பில் பள்ளிக்கு அழைத்து சென்ற வன அதிகாரிகள்

 மாணவர்களை ஜீப்பில் பள்ளிக்கு அழைத்து சென்ற வன அதிகாரிகள்

சாம்ராஜ்நகர்: தினமும் 14 கி.மீ., பள்ளிக்கு நடந்தே சென்ற மாணவர்களை, வனத்துறை அதிகாரிகள் தங்கள் ஜீப்பில் அழைத்து சென்று வருகின்றனர். சாம்ராஜ்நகர் ஹனுார் தாலுகா பச்சேடோடி கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு தினமும் 14 கி.மீ., நடந்து சென்று வந்தனர். பஸ் வசதி எதுவும் இல்லை. சாலையில்லாத பாதைகளில் சேறும் சகதியில் நடந்து சென்றனர். இது பற்றி எம்.எம்., எனும் மலை மாதேஸ்வரா வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, அவர்கள் தங்கள் ஜீப்பில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் திரும்பி அழைத்து வந்தனர். இந்த நடைமுறையை நேற்று முன்தினம் முதல் தொடங்கினர். இதை கிராம மக்கள் பாராட்டினர். எம்.எம்., வனத்துறை துணை வன பாதுகாவலர் பாஸ்கர் கூறியதாவது: மாணவர்களின் நலனுக்காக வனத்துறை ஜீப் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து மேலதிகாரிகளிடம் தெரிவித்து விட்டேன். மாணவர்களுக்காக விரைவில் நிரந்தர வாகனம் ஏற்பாடு செய்யப்படும். அதுவரை, ஜீப்பில் மாணவர்களை அழைத்து செல்ல முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி