உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹோட்டல் ஊழியரை கொன்ற நண்பர் கைது

ஹோட்டல் ஊழியரை கொன்ற நண்பர் கைது

மாரத்தஹள்ளி : பணத்தகராறில், ஹோட்டல் ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற, நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரு மாரத்தஹள்ளியில் உள்ள ஹோட்டலில் ஆந்திராவின் மகாதேவ், 45, ராய்ச்சூரின் ராஜு, 43, ஆகியோர் ஊழியர்களாக வேலை செய்தனர்; நண்பர்களாக பழகினர். பணம் கொடுக்கல், வாங்கலில் இருவருக்கும் இடையில், சில நாட்களாக தகராறு இருந்தது. நேற்று அதிகாலை 2:00 மணியளவில் மாரத்தஹள்ளி அவுட்டர் ரிங் ரோடு பகுதியில், இருவரும் மது அருந்தினர். குடிபோதையில் இருந்த இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. ஒருவரையொருவர் அடித்து கொண்டனர். கோபம் அடைந்த ராஜு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மகாதேவ் வயிற்றில் சரமாரியாக குத்தினார். ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜுவை, மாரத்தஹள்ளி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை