உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொரோனா முறைகேடு வழக்கு விசாரணைக்கு அரசு தீவிரம்

கொரோனா முறைகேடு வழக்கு விசாரணைக்கு அரசு தீவிரம்

பெங்களூரு : பா.ஜ., ஆட்சியில் நடந்ததாக கூறப்படும், கொரோனா மருத்துவ உபகரணங்கள் முறைகேடு பற்றி, விசாரணைக்கு உத்தரவிட அரசு தீவிரம் காண்பித்து வருகிறது.கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில், கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் 2,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி, 700 பக்க முதல் இடைக்கால அறிக்கை, முதல்வர் சித்தராமையாவிடம் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் 1,800 பக்க இடைக்கால அறிக்கை தாக்கல் ஆகி உள்ளது. முதல் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட அம்சங்களை ஆராய, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு இடைக்கால அறிக்கைக்களில் கூறப்பட்டு உள்ள தகவல்கள் அடிப்படையில், விசாரணைக்கு உத்தரவிட அரசு தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது பா.ஜ., தலைவர்களுக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு செய்யும் தவறுகளை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தும் நேரத்தில், கொரோனா இடைக்கால அறிக்கையை அவசரம், அவசரமாக வாங்கி விசாரணைக்கு உத்தரவிட்டு பழிவாங்கும் அரசியல் செய்யும் செய்ய, அரசு முயற்சிப்பதாக பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !