உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹெப்பால் சந்திப்பில் இருக்கும் காலியிடம் பயன்படுத்த ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவு

ஹெப்பால் சந்திப்பில் இருக்கும் காலியிடம் பயன்படுத்த ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவு

பெங்களூரு: ''ஹெப்பால் சந்திப்பில், போலீஸ் நிலையத்தின் பின் பகுதியில் பஸ் நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம், பயன்படுத்தாமல் உள்ளது. இந்த இடத்தை எப்படி பயன்படுத்துவது?'' என, அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் என்று, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் அறிவுறுத்தினார். ஹெப்பால் சந்திப்பில் இருந்து, நாயண்டஹள்ளி சந்திப்பு வரையிலான வெளி வட்ட சாலைகளை ஜி.பி.ஏ., கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் ஆய்வு செய்தார். வெளி வட்ட சாலை, சர்வீஸ் சாலைகளில் நடக்கும் பணிகளை பார்வையிட்டார். அதிகாரிகள் மத்தியில் அவர் பேசியதாவது: ஹெப்பால் சந்திப்பு கீழ்ப்பகுதியில், ஒயிட் மிக்ஸ் போடப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக தார் பூச வேண்டும். பாதசாரிகள் நடந்து செல்ல வசதி செய்ய வேண்டும். ஹெப்பால் சந்திப்பில், போலீஸ் நிலையத்தின் பின்பகுதியில் பஸ் நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம், பயன்படாமல் உள்ளது. இந்த இடத்தை எப்படி பயன்படுத்துவது என, அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும். பத்ரப்பா லே - அவுட் மேம்பாலம் அருகில், சர்வீஸ் சாலை பாழாகியுள்ளது. 'ஹைடென்சிடி காரிடார்' திட்டத்தின் கீழ், பணிகள் நடக்கின்றன. நடைபாதைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும். பி.இ.எல்., சந்திப்பில், சாலையில் பள்ளங்கள் தென்படுகின்றன. இதை ஒப்பந்ததாரர் மூலமாக மூடுங்கள். வெளிவட்ட சாலையில் உள்ள, அனைத்து பள்ளங்களையும், உடனடியாக மூடுங்கள். ராஜ்குமார் சமாதியில் இருந்து நாகவரா சந்திப்பு வரையிலான சர்வீஸ் சாலைகளிலும் பள்ளங்கள் தென்படுகின்றன. இவற்றை மூட வேண்டும். கோரகுண்டேபாளையா தொழிற்பகுதி சாலை சீர்குலைந்துள்ளது; அதை சீரமைக்க வேண்டும். வெளி வட்ட சாலையின், இரண்டு ஓரங்களிலும் குப்பை குவிந்துள்ளது. இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். சர்வீஸ் சாலைகளிலும். குப்பை தென்படுகிறது. பிளாக் ஸ்பாட் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கண்டீரவா ஸ்டூடியோ சந்திப்பு அருகில், குடிநீர் வாரிய பணிகள் நடக்கின்றன. சாக்கடை நீர் சாலையில் ஓடுகிறது. இதை விரைந்து சரி செய்ய வேண்டும். வெளிவட்ட சாலையின், சீனிவாச நகரின் முத்துராஜ் சாலையில் இருந்து, வித்யாபீடம் சதுக்கம் வரை, 1.8 கி.மீ., தொலைவில் ஒயிட் டாப்பிங் பணிகள் நடக்கின்றன. 1 கி.மீ., தொலைவில் பணிகள் முடிந்துள்ளன. மீதி இடத்திலும் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். எந்த சாலையிலும் பள்ளங்கள் இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை