உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மனைவியுடன் மனஸ்தாபம் கணவர் துாக்கிட்டு தற்கொலை

 மனைவியுடன் மனஸ்தாபம் கணவர் துாக்கிட்டு தற்கொலை

பெங்களூரு: ஹூப்பள்ளி நகரின், பெங்கேரி கிராமத்தின், ஹரிஜன காலனியில் வசித்தவர் சந்தோஷ் அள்ளூரு, 39. இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள னர். மனைவி விரும்பியதால், அவரை அங்கன்வாடியில் பணிக்கு சேர்த்துவிட்டார். அங்கன்வாடியில் பணியில் அமர்ந்த பின், மனைவியின் குணம் மாறியது. கணவரை மதிக்காமல் ஊர் சுற்ற துவங்கினார். இதனால் தம்பதிக்கிடையே தகராறு நடந்தது. கணவரிடம் விவாகரத்து கேட்ட மனைவி, கணவர் மீது போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். இதனால் போலீசார் விசாரணை என்ற பெயரில், சந்தோஷுக்கு தொந்தரவு கொடுத்தனர். மனம் நொந்த சந்தோஷ், நேற்று காலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, கேஷ்வாபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை