உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லட்சுமி ஹெப்பால்கர் மீண்டும் அமைச்சர்?

லட்சுமி ஹெப்பால்கர் மீண்டும் அமைச்சர்?

பெலகாவி: கர்நாடக அமைச்சரவையில், பெண் அமைச்சர் ஒருவரும் இல்லை. எனவே, பெண்ணுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து, அரசு ஆலோசிக்கிறது. நயனா மோட்டம்மா உட்பட, பெண் எம்.எல்.ஏ.,க்கள் பலரும், அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றனர். லட்சுமி ஹெப்பால்கர் இம்முறையும், தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறார். இதுகுறித்து, பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: விரைவில் கர்நாடக அரசின் அமைச்சரவையில், பெண் அமைச்சரை பார்ப்பீர்கள். பதில் அளிக்கும் இடத்தில், நான் இல்லை. அமைச்சரவையில் பெண்ணுக்கு வாய்ப்பு கிடைக்குமா, நான் மீண்டும் அமைச்சராவேனா என, இரண்டு கேள்விகளை கேட்டுள்ளீர்கள். விரைவில் பெண் ஒருவர் அமைச்சராவார். இரண்டாவது கேள்விக்கு, பதில் அளிக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசியல் ஒரே விதமாக இருக்காது. அதிகாரமும் நிரந்தரம் அல்ல. பதவியில் இருந்த போது, மக்கள் நினைத்து பார்க்கும்படி பணியாற்றினேன். அமைச்சராக இருந்த போது, என் தொகுதிக்கும், மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் நற்பணிகளை செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை