மேலும் செய்திகள்
வயிற்று வலியால் மாணவி தற்கொலை
20-Jul-2025
வயாலிகாவல் : கல்லுாரி மாணவியை கத்தியால் குத்திய, வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, வயாலிகாவல் பசப்பா கார்டனில் வசிப்பவர் வேணுகோபால். இவரது மனைவி சரோஜம்மா. தம்பதியின் வீட்டில் லலிதா, 45, என்பவர் வீட்டு வேலை செய்தார். வேணுகோபாலின் நண்பர் மகளும், கல்லுாரி மாணவியுமான சுஷ்மிதா, 21, அடிக்கடி வேணுகோபால் வீட்டிற்கு செல்வது வழக்கம். லலிதாவை பார்த்து, 'நீங்கள் வீட்டு வேலை ஒழுங்காக செய்வது இல்லை' என, சுஷ்மிதா கேலி, கிண்டல் செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வேணுகோபால் வீட்டிற்கு வந்த சுஷ்மிதா, மூன்றாவது மாடியில் துாங்கிக் கொண்டு இருந்தார். இரவில் அங்கு சென்ற லலிதா, 'எனக்கு அறிவுரை கூற நீ யார்?' என்று கேட்டு தகராறு செய்து, கத்தியால் குத்தினார். சுஷ்மிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லலிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
20-Jul-2025