உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆட்டோவில் இருந்து விழுந்தவர் மீது பஸ் ஏறி பலி

 ஆட்டோவில் இருந்து விழுந்தவர் மீது பஸ் ஏறி பலி

ராய்ச்சூர்: ராய்ச்சூரில் வாகனத்தை முந்தும் போது ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், தடுமாறி கீழே விழுந்த போது, பின்னால் வந்த அரசு பஸ், அவர் மீது ஏறியதில் உயிரிழந்தார். ராய்ச்சூர் நகரின் ஆஷாபூர் சாலையில் இருந்து பசவேஸ்வரா சதுக்கத்துக்கு ஆட்டோ ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த, ஆட்டோ ஓட்டுநர் வேகமாக சென்று வலதுபுறமாக ஓட்டினார். அப்போது லேசாக ஆட்டோ வளைந்தவாறு சென்றதால், ஆட்டோவில் அமர்ந்திருந்த பசவராஜ், 21, என்பவர் சாலையில் விழுந்தார். இந்நேரத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், பசவராஜ் மீது ஏறியது. படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அனைத்தும் பஸ்சில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த ராய்ச்சூர் நகர போலீசார், பஸ் ஓட்டுநரை கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பசவராஜின் குடும்பத்தினர், டிரைவர் மீது புகார் அளித்துள்ளனர். தங்களுக்கு போக்குவரத்து துறை இழப்பீடு தர வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை