உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நடைபாதையை மீண்டும் ஆக்கிரமித்தால்... வியாபாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

 நடைபாதையை மீண்டும் ஆக்கிரமித்தால்... வியாபாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

பெங்களூரு: ''நடைபாதைகளில் மீண்டும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு, இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும்,'' என, பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா எச்சரிக்கை விடுத்து உள்ளார். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் எல்லைக்குள், பாதைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுதல்; கழிவுகளில் இருந்து விடுதலை; கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் நேற்று கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா பேசியதாவது: பெங்களூரு நகரில், 1,500 கி.மீ., நீளமுள்ள பிரதான சாலைகள், துணை சாலைகளில் ஆக்கிரமிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை, 964 கி.மீ., நீளமுள்ள நடைபாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள நடைபாதை ஆக்ரமிப்புகளையும், இந்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். அகற்றப்பட்ட பகுதிகளில் இ ணையாக, சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நகரில் நடைபாதைகளில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட அதே இடங்களில் தெருவோர வியாபாரிகள் மீண்டும் தங்கள் வியாபாரத்தை தொடர்வதை காண முடிகிறது. மீண்டும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்ப வர்களின் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு, இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி, போலீசாருடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை