உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

சவுஜன்யா தாய் அதிருப்தி தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா உஜ்ரேயில், கடந்த 2012ம் ஆண்டு, கல்லுாரி மாணவி சவுஜன்யா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில், சி.பி.ஐ., விசாரணை சரியில்லை. கர்நாடக அரசு எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து மறுவிசாரணை செய்ய வேண்டும் என, கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, எஸ்.ஐ.டி., குழு தலைவராக ஐ.பி.எஸ்., அதிகாரியான சசிகுமார் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து, சவுஜன்யாவின் தாய் குஸ்மாவதி கூறுகையில், ''மாநில அரசு அமைத்த எஸ்.ஐ.டி., மீது அதிருப்தி உள்ளது. எஸ்.ஐ.டி.,யில் டி.என்.ஏ., பகுப்பாய்வில் அனுபவம் உடைய மூத்த அதிகாரி ஒருவர் தேவை. இதை உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தற்போது அமைக்கப்பட்ட விசாரணை குழுவில், அப்படிப்பட அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை,'' என்றார். ரூ.27 லட்சம் அபராதம் பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகளை பராமரிக்காத எபிலியூம், ஈஸ்மார்ட் எனர்ஜி சொல்யூஷன் ஆகிய இரண்டு ஒப்பந்த நிறுவனங்களுக்கு, 27,79,307 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் கூறுகையில், ''பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம். தெரு விளக்குகளை பராமரிப்பதில் அலட்சியமாக இருப்பது பொறுத்துக் கொள்ளப்படாது,'' என்றார். மின் விபத்து குடகு மாவட்டம், விராஜ்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு விநாயகர் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் பல ஊர்களிலிருந்து விநாயகர் சிலைகள் வந்திருந்தன. அப்போது, வாகனத்தின் மீது, 'டிஜே' எனும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த வாகனம் மெதுவாக வந்து கொண்டிருக்கும் போது, மின்சார ஒயர் பட்டு 'ஷாக்' அடித்தது. இதில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஹூப்பள்ளியை சேர்ந்த பசவராஜு என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மூளைச்சாவு தட்சிண கன்னடா அனைத்து கல்லுாரி மாணவர்கள் சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலக பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழா, மங்களூரு ராம லட்சுமி நாராயணா ஹாலில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க ஏராளமான மாணவர்கள் வந்தனர். இதனால், அரங்கத்திற்கு வெளியே, வரான்டாவில் ஏராளமான மாணவர்கள் நின்றனர். அப்போது, வரான்டாவின் தடுப்புச்சுவர் திடீரென இடிந்தது. ஆறு மாணவர்கள், முதல் தளத்திலிருந்து கீழே விழுந்தனர். பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், முகமது ஷமாஸ், 18, என்ற மாணவர் மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வாலிபர் கொலை மைசூரு டி.நரசிபுரா தாலுகா அலகுடு கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ், 25. இவர், நேற்று டி.நரசிபுரா ஆர்.எம்.சி., வளாகத்தில் சென்று கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்களான கெஞ்சப்பா, சஞ்சு, மனு ஆகிய மூன்று பேர், டி.நரசிபுரா போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். நிலத்தகராறு தொடர்பான முன் விரோதம் காரணமாக கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என, இறந்த சுபாஷின் குடும்பத்தினர் கூறினர். விசாரணை தொடர்வதாக மாவட்ட எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதண்டி கூறினார். பழிவாங்க திட்டம் பஜ்ரங் தள் தொண்டர் சுஹாஷ் ஷெட்டி, கடந்த ஆண்டு ஆறு பேர் கொண்ட கும்பலால் மங்களூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது வன்முறையாக வெடித்தது. இவ்வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்கிறது. இந்நிலையில், சுஹாசின் கொலைக்கு பழிவாங்க, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு வந்தது அம்பலமாகி உள்ளது. கூலிப்படை மூலம் பழிவாங்க திட்டமிட்டதாகவும், இதற்காக 24 லட்சம் ரூபாய் செலவு செய்ய முற்பட்டதையும், பஜ்பே போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக பஜ்பே போலீசார், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விரைவில் கைது செய்யப்படுவர் என, மங்களூரு போலீஸ் கமிஷனர் சுதிர் குமார் தெரிவித்தார். மாணவர்கள் அஞ்சலி பாகல்கோட் மாவட்டம், நீலாநகரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் பசவராஜ் ராமப்பா ஷெட்டி, 53. இவர் இரண்டு வாரங்களுக்கு முன் பைக்கில் செல்லும் போது, கார் ஒன்று மோதியது. பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல், நேற்று காலை பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மலர் துாவி இறுதி அஞ்சலியை செலுத்தினர். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பார்த்தவர்கள் கண்ணீர் சிந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை