யாருக்கும் ஆதரவாக இல்லை
பெங்களூரு; பெங்களூரில் சபாநாயகர் காதர் நேற்று அளித்த பேட்டி:கர்நாடக வரலாற்றில் 18 எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது இதுவே முதல்முறை. ஆனால் நான் எண்ணிக்கையை பார்ப்பது இல்லை. சபாநாயகர் பீடத்தை யார் அவமதித்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.அரசியலமைப்பு சட்டப்படி என் வேலையை செய்கிறேன். இன்று நான் நடந்து கொண்டது சரியா, தவறா என்பதை மாநில மக்கள் முடிவு செய்வர்.காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு நான் ஆதரவாக இல்லை. எல்லாருக்கும் பேச வாய்ப்புக் கொடுக்கிறேன். 'ஹனிடிராப்' குறித்து உள்துறை அமைச்சருடன் பேசுவதாக, முதல்வர் கூறினார். ஆனால் அதை பா.ஜ., உறுப்பினர்கள் ஏற்கவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கவர்னர் அலுவலகத்தில் பா.ஜ., மனு அளித்து இருப்பது சந்தோஷம். அவர்கள் வேலையை அவர்கள் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.