உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீட்டில் தீ விபத்து ஒன்றரை வயது குழந்தை பலி

வீட்டில் தீ விபத்து ஒன்றரை வயது குழந்தை பலி

வசந்த்நகர்: மின்கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒன்றரை வயது பெண் குழந்தை, உடல் கருகி இறந்தது. பெங்களூரு, வசந்த்நகர் சாங்கி சாலையில் சம்மிட் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேபாளத்தை சேர்ந்த புஷ்கர் குமார், 25, காவலாளியாக வேலை செய்கிறார். இவரது மனைவி ஜோதி குமாரி, 22. இந்த தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை அனு. அடுக்குமாடி குடியிருப்பின் அருகில், சிறிய வீட்டில் தம்பதியும், குழந்தையும் வசித்தனர். நேற்று காலை தம்பதி வேலைக்கு சென்றனர். குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்தது. நேற்று மாலை மின்கசிவால் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த துணிகள், பொருட்கள் எரிந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புஷ்கர் குமாருக்கு தகவல் கொடுத்தனர். அலறி அடித்து வீட்டிற்கு சென்றார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, உடல் கருகி குழந்தை இறந்து கிடந்தது. ஹைகிரவுண்ட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி