உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தெருநாய்களுக்கு உணவு அளிப்போருக்கு இடையூறு செய்ய கூடாது என உத்தரவு

 தெருநாய்களுக்கு உணவு அளிப்போருக்கு இடையூறு செய்ய கூடாது என உத்தரவு

பெங்களூரு: 'தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது' என, பெங்களூரு தெற்கு மாநகராட்சி அறிவித்து உள்ளது. மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தெரு நாய்களுக்கு உணவளிப்பது சட்ட விரோதமான செயல் அல்ல. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது. தெரு நாய்களை வேறு இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள் என கூறி, உணவளிப்பவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தெரு நாய்களுக்கு உணவு அளிப்பது தவறு கிடையாது. இதை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். அதே சமயம், மாநகராட்சி எல்லைக்குள் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை அடையாளம் காண, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியில் தன்னார்வலர்கள், குடியிருப்பு நல சங்கத்தினர் என அனைவரும் ஒத்துழைப்பும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !