உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது அமர்ந்திருந்த சிறுத்தையால் பீதி

 வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது அமர்ந்திருந்த சிறுத்தையால் பீதி

ஹாசன்: காலே கவுடனகொப்பலு கிராமத்தில், வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது சிறுத்தை அமர்ந்திருந்ததால், மக்கள் கிலி அடைந்துள்ளனர். ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவின், காலேகவுடனகொப்பலு கிராமத்துக்குள், நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை புகுந்தது. நாய்கள், ஆடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட அங்கும் இங்கும் அலைந்தது. அதன்பின் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, அமர்ந்து கொண்டது. அந்த வீட்டில் பாதுகாப்புக்காக, க ண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். திருடர்கள் காம்பவுண்ட் சுவர் அருகில் வந்தால், கண்காணிப்பு கேமராவில் இருந்து, அலாரம் ஒலிக்கும். சிறுத்தை காம்பவுண்ட் சுவர் மீது அமர்ந்த போது, அலாரம் ஒலிக்க துவங்கியது. பொதுவாக இத்தகைய சத்தங்களுக்கு, வன விலங்குகள் பயந்து ஓடி விடும். ஆனால் இந்த சிறுத்தை அலாரம் பெரும் சத்தத்துடன் ஒலித்தும், அசையாமல் நீண்ட நே ரம் காம்பவுணட் சுவர் மீது அமர்ந்திருந்தது. வீட்டு உரிமையாளர்கள், கத வை திறக்காமல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, சிறுத்தை அமர்ந்திருப்பது தெரிந்தது. கடந்த வாரம் இதே கிராமத்தின் அருகில் சிறுத்தை, ஆட்டை கொன்று தின்றது. இப்போது ம ற்றொரு சிறுத்தை கிராமத்துக்குள் புகுந்துள்ளது. இதனால் கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர். சிறுத்தையை பிடிக்கும்படி, வனத்துறையினரிடம், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை