உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராஜ்பவனை சுற்றி பார்க்க விரைவில் அனுமதி

ராஜ்பவனை சுற்றி பார்க்க விரைவில் அனுமதி

பெங்களூரு : கவர்னர் மாளிகையான ராஜ்பவனை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்க உள்ளது. கர்நாடக சுற்றுலா கார்ப்பரேஷன், பொது மக்கள் விதான் சவுதாவுக்குள் சென்று சுற்றிப்பார்க்கும் திட்டத்தை ஜூன் 1ம் தேதி செயல்படுத்தியது. வாரந்தோறும் ஞாயிறு, விடுமுறை நாட்களில் விதான் சவுதாவை பொதுமக்கள் சுற்றிப் பார்க்கலாம். இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோன்று, கவர்னர் மாளிகையான ராஜ்பவனை சுற்றி பார்க்கும் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த, சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷன் லிமிடெட் தயாராகி வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பு கட்டப்பட்ட ராஜ்பவன், அற்புதமான கலை வடிவத்துடன் கட்டப்பட்டது. கவர்னர் வசிக்கும் மாளிகையை பார்க்க வேண்டும் என, பலருக்கும் ஆசை இருக்கும். விரைவில் 'கைடு டூர்' என்ற பெயரில், ராஜ்பவனை பார்க்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 1840 முதல் 1842 இடையே, சர் மார்க் கப்பன், இந்த மாளிகையை பிரிட்டிஷ் கமிஷனருக்காக கட்டினார். அப்போது 'ரெசிடென்சி' என, அழைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் தங்கினர். நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பின் ராஜ்பவனாக மாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை