மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி காலில் சுட்டுப்பிடிப்பு
16-Apr-2025
நிலம் சமன் செய்ய லஞ்சம் வருவாய் ஆய்வாளர் கைது
09-Apr-2025
ஷிவமொக்கா: கிரிக்கெட் விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறால் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக, ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி, கேசவபுராவை சேர்ந்த அருண், 23, கடந்த திங்கட்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து ஹொசமனே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, நேற்று முன்தினம் ஐந்து பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அருண்குமார், 19, தலைமறைவாக இருந்தார்.நேற்று ஹொசமனே பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்ய முயன்றபோது, அருண் குமார், போலீசாரை கற்களால் தாக்க துவங்கினார். இதில் போலீஸ் ஜீப் சேதமடைந்தது.தப்பிச் செல்ல முயன்ற அவரது வலது காலில் போலீசார் சுட்டனர். அவர் கீழே விழுந்தார். அவரை கைது செய்து, பத்ராவதி தாலுகா மருத்துமனையில் அனுமதித்தனர். பின், தீவிர சிகிச்சைக்காக ஷிவமொக்காவில் உள்ள மெக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
16-Apr-2025
09-Apr-2025