உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறந்த மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க அரசியல் கல்லுாரி

 சிறந்த மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க அரசியல் கல்லுாரி

பெங்களூரு: ''அரசியலுக்கு வர விரும்பும் புதியவர்களுக்கு வழிகாட்டவும், பயிற்சி அளிக்கவும் அரசியல் கல்லுாரி துவங்கும் ஆலோசனை உள்ளது,'' என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார். முன்னாள் அமை ச்சர் பசவலிங்கப்பா நுாற்றாண்டு ஜெயந்தி விழா, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முன்தினம் நடந்ததது. இதில், மேல்பை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பேசியதாவது: முன்னாள் அமைச்சர் பசவலிங்கப்பா, அம்பேத்கரின் தத்துவங்களை தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர். ஒதுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு, வாழ்க்கையை அமைத்து கொடுத்தவர். இத்தகைய நிர்வாகத்திறன் உள்ள தலைவரை பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டும். பசவலிங்கப்பா போன்று, மக்கள் பிரதிநிதிகளை தயார் செய்யும் நோக்கில், அரசியல் கல்லுாரி துவக்க ஆலோசிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசியலுக்கு வரும் புதியவர்களுக்கு பயிற்சியளித்து, வழிகாட்டி மக்கள் பிரச்னைகளில் அக்கறை காட்டும் சிறந்த மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்கப்படுவர். தற்போது சட்டசபைக்கு வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, பசவலிங்கப்பாவின் தனித்துவம், அவரது போராட்டம் பற்றி தெரியவில்லை. இவரை பற்றி சபையில் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. இவர்கள் முதலில் நுாலகங்களுக்கு சென்று, பசவலிங்கப்பாவை பற்றி தெரிந்து கொள்ளும்படி கூறுவேன். இவர் கீழ்மட்ட சமுதாயங்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர். மனிதர்களே மலம் அள்ளும் நடைமுறையை ரத்து செய்தார். தலித்துகளுக்கு நில உரிமை வழங்க சட்டம் கொண்டு வந்தவர். அவர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தேவராஜ் அர்ஸ் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல. தலித்துகளின் முன்னேற்றத்துக்காக உழைத்தவர். அவருக்கு எந்த துறையை கொடுத்தாலும், ஆழமாக ஆராய்ந்து சட்டசபையில் பேசுவார். தன் துறை தொடர்பான கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை