உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாணவரை விமர்சித்த பேராசிரியர் சஸ்பெண்ட்

 மாணவரை விமர்சித்த பேராசிரியர் சஸ்பெண்ட்

பனசங்கரி: பனசங்கரியில் கல்லுாரியில் பாடம் நடத்தி கொண்டிருந்த பேராசிரியர், மாணவரை பயங்கரவாதி என்று திட்டியதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெங்களூரு பனசங்கரி வட்டச்சாலையில் அமைந்து உள்ளது பி.இ.எஸ்., பல்கலை கழகம். கடந்த, 24ம் தேதி கல்லுாரியின் வணிகவியல் துறை பகுதி நேர பேராசிரியர் டாக்டர் முரளிதர் தேஷ்பாண்டே பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது, அபான் என்ற மாணவர் கூச்சலிட்டார். இதனால், கோபம் அடைந்த பேராசிரியர், மாணவரை பார்த்து, 'உனக்கு வெட்கமாக இல்லையா? இன்று வகுப்பில் கோபப்படக்கூடாது என்று நினைத்தேன். உன்னை போன்றவர்களால் தான் ஈரான் போர் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. டொனால்டு டிரம்ப் வந்து உன்னை போ ன்றவர்களை அழைத்து செல்வார். நீ நரகத்துக்கு போகிறாயா?' என்று கோபமாக கேட்டார். இதை வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். இந்த வீடியோவால், பேராசிரியரை பல்கலை கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. அதே வேளையில் வைரலான இந்த காணொளியின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இச்சம்பவத்திற்கு என்.எஸ்.யு.ஐ., எனும் இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளது. பேராசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக கிரிநகர் போலீசில் விசாரித்த போது, இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனால், காணொளியை கருத்தில் கொண்டு, அவர்களாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை