உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஓநாய் பாதுகாப்பில் ஆடுகள் இருக்கக்கூடாது என்கிறார் ரவி

 ஓநாய் பாதுகாப்பில் ஆடுகள் இருக்கக்கூடாது என்கிறார் ரவி

கோலார்: ''ஓநாயின் உறுதிமொழியை ஆடுகள் ஏற்றால் பேரிழப்பு ஏற்படும். நாங்கள் மேய்ப்பர்கள். ஆடுகளை பாதுகாப்போம்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி பேசினார். கைவாரா அருகே உள்ள ஜே.கே. ஹில் வியூவ் ரிசார்ட்டில், கோலார் மாவட்ட பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்திருந்த மாவட்ட அரசியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில், சி.டி.ரவி பேசியதாவது: ஓநாய் எப்போதும் ஆடுகளிடம், பயப்படாதீர்கள் நான் இங்கே இருக்கிறேன்; தைரியமாக இருங்கள் என்று தான் சொல்லும். ஓநாயின் வார்த்தைகளை நம்பியதால், ஆடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தது. எனவே, ஆடுகளை ஓநாயின் நம்பிக்கைக்கு உரிய ஆளாக ஒப்படைக்க கூடாது. நாம் மேய்ப்பர்களாகி, ஓநாயிடமிருந்து ஆடுகளை பாதுகாப்போம். பொதுமக்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டும் என்று முதல்வர் சிவக்குமார் கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்புவதா அல்லது அவரது கடந்த கால வரலாற்றை புரட்டிப் பார்ப்பதா என்று எனக்கு தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தொண்டர்கள், நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதியாக உயர்ந்துள்ளனர். நாட்டு மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். விவசாயிகளின் அனுமதியின்றி, அவர்களின் நிலத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது. வலுக்கட்டாயமாக அரசு கையகப்படுத்தினால், நாங்கள் விவசாயிகளுக்கு துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை