உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முன் பகையில் ரவுடி வெட்டிக்கொலை

 முன் பகையில் ரவுடி வெட்டிக்கொலை

தனிசந்திரா: சிறையில் இருந்து விடுதலையாகி, பேக்கரி கடை நடத்தி வந்த ரவுடியை, ஆறு பேர் கும்பல், அவரின் தாய் முன்னிலையில் வெட்டிக் கொன்றது. பெங்களூரு தனிசந்திரா அமர்ஜோதி லே - அவுட்டை சேர்ந்தவர் ரவுடி பவன் குமார், 28. மூன்று ஆண்டுகளுக்கு முன், ரவுடி கபில் கொலை வழக்கில் சிறையில் இருந்தார். எட்டு மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து வந்த அவர், வீட்டின் அருகே பேக்கரி நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பேக்கரியை மூடிவிட்டு, வீட்டுக்கு தன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். வீட்டின் முன் வாகனத்தை நிறுத்திய போது, மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஹெல்மெட் அணிந்த ஆறு பேர், பவன்குமாரை சரிமாரியாக வெட்டினர். சத்தம் கேட்டு வெளியே வந்த பவன் குமாரின் தாய் கோமலா, தடுக்க முடியாமல் கதறி அழுதார். அங்கிருந்தவர்களும் தடுக்க முன்வரவில்லை. சம்பவ இடத்திலேயே பவன் குமார் பலியானதும், மர்ம நபர்கள் தப்பியோடினர். தகவல் அறிந்த சம்பிகேஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். தப்பியோடியவர்களில், கபிலின் சகோதரர் இருப்பதாக கூறப்படுகிறது. கொலை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பவன் குமார் தாய் கோமலா கூறியதாவது: எட்டு மாதங்களுக்கு முன் தான், என் மகன் சிறையில் இருந்து விடுதலையானான். யாரிடமும் வம்புக்கு செல்லாமல் இருந்தான். போனில் கூட, பேக்கரியை மூடிவிட்டு வருகிறேன் என்று கூறினான். அவர்கள், அவனை பின் தொடர்ந்து வந்து, வீட்டின் முன், என் கண் முன்னே அவனை கொன்று விட்டனர். முன்பகை காரணமாக இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர். பிரேம் என்பவர், தன்னை கொல்ல திட்டமிட்டுள்ளதாக பவன்குமார் அடிக்கடி கூறி வந்தான். எனவே, மகனை சில மாதங்கள் என் உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தேன். ஒன்றரை மாதத்துக்கு முன் பேக்கரி வைத்ததால், என் வீட்டுக்கு வரவழைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ