உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஏ.டி.எம்., மையத்தில் ரூ.27 லட்சம் கொள்ளை

ஏ.டி.எம்., மையத்தில் ரூ.27 லட்சம் கொள்ளை

கோலார் : கோலார் நகரின் சஹகார நகரில் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்.,மில் புகுந்த மர்ம கும்பல் 27 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்றது.கோலார் நகரின், கல்பேட் போலீஸ் நிலையம் அருகில், சஹகார நகரில் எஸ்.பி.ஐ., வங்கி கிளை உள்ளது.நேற்று முன் தினம் நள்ளிரவு, இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம்., மையத்துக்குள் புகுந்தது. ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, அதில் இருந்த 27 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து தப்பியது.நேற்று காலை பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்., இயந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த கல்பேட் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.சம்பவம் நடந்த ஏ.டி.எம்., மையத்தை, கோலார் எஸ்.பி., நிகில் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ