உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாலுார் கோவிலில் ரூ.30 லட்சம் உண்டியல் வசூல்

 மாலுார் கோவிலில் ரூ.30 லட்சம் உண்டியல் வசூல்

மாலுார்: மாலுார் வெங்கட ரமண சுவாமி கோவில் உண்டியல் காணிக்கையாக, 30 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சிக்க திருப்பதி என்றழைக்கப்படும் மாலுாரின் வெங்கட ரமண சுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் எண்ணும் பணிகள் நடப்பது வழக்கம். நேற்று மாலுார் தாசில்தார் ரூபா தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கனரா வங்கி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் எண்ணினர். இதில் 30 லட்சம் ரூபாய் ரொக்கம்; 13.45 கிராம் தங்கம்; 441 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. இந்த தொகையை கனரா வங்கியில் கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி